Jul 7, 2015

Motorolo நிறுவனம் Moto X (2nd Gen) போனின் புதிய Cognac Leather மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் cognac leather மற்றும் பிரவுன் வண்ண shade-ம் கொண்டுள்ளது.

Moto X (2nd Gen) வழக்கமான வகை 32GB பதிப்பு சில்லறை கடைகளில் ரூ. 24,999-க்கு கிடைக்கிறது. இந்த புதிய Moto X (2nd Gen) cognac leather மாடல் ரூ. 25,999 என்ற விலையில் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது. வழக்கமான மாடலை விட இதன் விலை ரூ. 1000 மட்டுமே வித்தியாசம் .

மேலும் Motorola ரூ. 5000-க்கு மேல் எக்சேஞ்ச் சலுகையும் கொடுத்துள்ளது. மற்றபடி இதன் சிறப்பம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை.

Moto X (2nd Gen) சிறப்பம்சங்கள்
  • 1920 x 1080 பிக்சல் கொண்ட 5.2 இன்ச் AMOLED திரை.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.
  • ஆண்டிராய்ட் 5.0 லாலிபாப் ஓ.எஸ்.
  • Adreno 330 GPU இணைந்த 2.5 GHz quad-core Qualcomm Snapdragon 80 பிராசசர்.
  • 2GB RAM.
  • 16GB இன்டெர்னல் சேமிப்பு திறன்.
  • இரட்டை LED ரிங் பிளாஸ் இணைந்த 13MP முதன்மை கேமரா, 
  • 2MP செல்பி கேமரா.
  • 3G, Wi-Fi 802.11a/g/b/n/ac, Bluetooth 4.0 LE, GPS, GLONASS and NFC போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
  • 2,300mAh திறன் கொண்ட பேட்டரி.

தற்போது இந்த Moto X (2nd Gen) Cognac Leather மாடல் ரூ. 25,999 விலையில் பிளிப்கார்ட் இணையதளத்தில்  வாங்கி கொள்ளலாம்.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

1 comment :