Jul 7, 2015

UMI நிறுவனம் இரட்டை திரை கொண்ட UMI Zero 2 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடவுள்ளது. இந்நிறுவனம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ‘Duplex Life, the best from UMI’ என்று இதன் புகைப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இது முதல் இரட்டை திரை போன் அல்ல. இதற்கு முன் Yota இரட்டை திரை கொண்ட போனை வெளியிட்டது.

இந்த Yota C9660 ஆரம்பத்தில் வெளியிடுகையில் ரூ. 20,000 விலையில் இருந்தது. தற்போது இதன் விலை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ரூ. 8,999 விலையில் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது. இதை தொடர்ந்து UMI நிறுவனம் இரட்டை திரை கொண்ட போனை வெளியிடவுள்ளது.

இந்த UMI Zero 2 போனின் இரண்டாவது திரையில் E ink தொழில்நுட்பம் கொண்ட EPD (Electronic Paper Display) திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே தொழிநுட்பம் தான் Yota போனிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த திரையின் நன்மை என்னவென்றால் குறைந்த சக்தியை எடுத்துக் கொள்வதோடு துல்லியமாகவும் உள்ளது. மேலும் இதன் திரை நேரடியான சூரிய ஒளியில் கூட தெளிவாக தெரியும்.

இதுவே உலகத்தின் இரண்டாவது இரட்டை திரை ஸ்மார்ட்போன். இதைப் பற்றிய முழுமையான சிறப்பம்சங்கள் வெளிவரவில்லை. ஆனால் இந்த போனின் விலை $500 (இந்திய மதிப்பு 31,780)-க்கு மேல் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :