Jul 7, 2015

டிஜிட்டல் இந்தியா வாரத்தை கொண்டாடும் விதமாக வீடியோகான் தொலைதொடர்பு நேற்று இலவச இன்டர்நெட் சலுகை ஒன்றை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எந்த வாடிக்கையாளர் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு 750MB இலவச மொபைல் இன்டெர்நெட்டை வழங்கியுள்ளது.

இந்த சோதனை முடிவில் சலுகையில் இன்டர்நெட் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு 750MB இலவச டேட்டா 2 மாத வேலிடிட்டியுடன் வீடியோகான் தொலைதொடர்பு வழங்கியுள்ளது. இதை தவிர்த்து 1500TB இலவச டேட்டாவை பயனர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.

வீடியோகான் நிறுவனம் மொபைல் டேட்டா அல்லாத சில சந்தாதாரர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் வந்த கருத்தில் “ஆரம்பத்தில் சற்று தயக்கம்” மற்றும் “டேட்டாவின் விலை” போன்ற கருத்தே மொபைல் டேட்டா பயன்படுத்தாதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 

கண்டிப்பாக இந்த வீடியோகானின் இந்த தொடக்கம் இந்த முக்கிய காரணங்களை தகர்த்தெரியும் என வீடியோகான் தொலைதொடர்பு டைரக்டர் மற்றும் CEO அரவிந்த் பாலி கூறினார். அவர் மேலும் கூறியதாவது ..

வீடியோகான் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் இன்டர்நெட் பயன்படுத்தாத பயனர்களின் நிலைமயை வீடியோகான் புரிந்து கொண்டது. மேலும் 86 சதவிகித இன்டர்நெட் பயன்படுத்தாத பயனர்கள் டேட்டா வசதி கொண்ட ஸ்மார்ட்போனை வைத்திருந்தாலும் டேட்டாவைப் பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர்.

இந்த ஆய்வில் சில பயனர்களிடம் ஆலோசனை கேட்கும்போது இதற்கான போதுமான அறிவும், தொடக்க தயக்கமும் தான் காரணம் எனவும் மற்றும் சில பேர் டேட்டா கட்டணம் மிகவும் அதிகம் என கூறினர். எனவே பெரும்பாலானோர் டேட்டா பயன்படுத்தாதற்கு இதுவே முக்கிய காரணம் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை இன்டர்நெட் பயன்படுத்த வைக்கும் விதமாக 750MB இலவசமாக வழங்கப்படுகிறது. 

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :