Jul 6, 2015


Xolo தனது துணை பிராண்டான ‘Black’-ஐ ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்நிறுவனம் Black பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் நிறுவனத்தின் ஆன்லைன் இ-காமர்ஸ் பார்ட்னரான ப்ளிப்கார்ட் இணையதளத்தின் மூலம் கிடைக்கும். இந்த Xolo Black ஸ்மார்ட்போன் depth-sensing சப்போர்ட் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் UI 1.5 வசதியை கொண்ட ஆண்டிராய்ட் லாலிபாப் ஓ.எஸ்-ஐ கொண்டதாக இருக்கலாம் எனவும் மேலும் 4G சப்போர்ட் செய்யக் கூடிய ரூ. 15,000 விலை பிரிவில் வரும் என தெரிகிறது.

மைக்ரோமேக்ஸ் Yu தயாரிப்புகள், சியோமி Mi சாதனங்கள், போன்றவற்றிற்கு போட்டியை தருவதோடு, இந்தியா உட்பட அனைத்து மார்கெட்டிலும் சிறந்ததாக Xolo Black ஸ்மார்ட்போன் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த Black ஸ்மார்ட்போனின் முன்னோட்டத்தை யூடுயூப் இணையதளத்தில் ஒளிபரப்பியது. 

தற்போது Xolo Black பிராண்ட் ஸ்மார்ட்போனை நிறுவனம் பிளிப்கார்ட் இணையத்தின் வழியாக விற்பனை செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியது.


கடந்த வாரம் வெளியிட்ட Xolo Black ஸ்மார்ட்போனின் முன்னோட்டம் வீடியோ : https://goo.gl/7z8CCj

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :