Jul 6, 2015

சியோமி நிறுவனம் சஸ்பென்ஸ் வைத்து  புகைப்படம் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சியோமி Mi இந்தியா நிறுவனம் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியீட்டுள்ளது.   

அந்த படத்தின் கீழே ‘get ready to change your phone’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள விலை முழுமையாக காண்பிக்கவில்லை. இருந்தாலும் நாம் தெளிவாக இதன் விலை ரூ. 5,999 என்று யூகிக்க முடிகிறது.

மேலும் சியோமி 7th July at 10am என்றும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அனேகமாக இது Redmi 2 போனின் விலை சரிவாகத்தான் இருக்கும் (தற்போது ரூ. 6,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது) அல்லது Redmi 2A ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த சியோமி Redmi 2 ஸ்மார்ட்போன் 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு திறனுடன் ரூ. 6,999-க்கு இந்தியன் மார்க்கெட்டில் வெளியிட்டனர். தற்போது இதன் விலை குறைவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆனால் ரூ. 5999 பற்றிய இந்த புகைப்படத்தின் சஸ்பென்ஸ் நாளை நீங்கி விடும். நாளை காலை 10 மணி அளவில் Mi.com இணையதளத்தில் இதைப் பற்றிய தெளிவான தகவல்கள் கிடைத்து விடும் அது வரை காத்திருங்கள்.

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :