Jul 7, 2015

இந்தியாவில் மொபைல் போன் பயனர்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றனர். ஆனால் அனைத்து மொபைல் போன் பயனர்களும் வங்கி கணக்கு வைத்திருப்பதில்லை. பெரும்பாலானோர் பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளை தேடி செல்வதில்லை மொபைல் மற்றும் கணினியில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி விடுகின்றனர்.

மேலும் இதற்காக ATM மற்றும் பேங்க் அக்கவுன்ட் போன்றவை தேவைப்படுகிறது. தற்போது இந்த சுமையையும் குறைக்கத்தான் WALLET எனப்படும் சேவை பிரபலமாகி கொண்டிருக்கிறது. இதற்கு உங்களது பெங்க் அக்கவுன்ட் ATM போன்றவை தேவை இல்லை. உங்களது பணத்தை இதற்கான சேவை மையங்களில் சென்று ஏற்றி தேவையான ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

இந்த பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக BSNL நிறுவனம் SpeedPay என்ற சேவையை தொடங்கியது. வங்கிக்கணக்கு  அல்லாத அனைத்து பயனர்களுக்கு இந்த மொபைல் WALLET பெரிதும் உதவுகிறது. தேவையான விஷயம் இதற்கு BSNL கனெக்சன் தேவைப்படுகிறது.

இந்த வசதியில் பேங்க் பரிமாற்றமும் சாத்தியம். இந்த Speedpay சேவைக்காக BSNL நிறுவனம் Pyro மற்றும் ஆந்திரா வங்கியுடன் கைகோர்த்துள்ளது. மேலும் ATM மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் சென்று இந்த WALLET-ஐ பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக Visa சேவையுடனும் கூட்டு சேர்ந்துள்ளது. அதோடு மற்றொரு SpeedPay wallet-ற்கு பணத்தை பரிமாற்றவும் செய்யலாம் .

ஒரு நாளைக்கு ரூ. 5000 வரை மட்டுமே பணத்தை எடுத்துக் கொள்ளும் வரம்பு உள்ளது. ஆண்டிராய்ட் மற்றும் iOS மொபைல்களில் செயலியாக (App) இந்த SpeedPay கிடைக்கும். BSNL நிறுவனத்தின் இந்த Speedpay வங்கி அமைப்பை போன்றது ஆகும். வங்கி அக்கௌன்ட் அமைப்பை போன்ற அனைத்து வசதிகளையும் இதில் பெறலாம். மேலும் இதைப் பற்றிய அனைத்து தகவல்களும் விரைவில் கிடைக்கப்பெறும்.

BSNL ஆந்திரபிரதேசத்தில் 45,000 வாடிக்கையாளர் மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் படிப்படியாக இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மையங்களில் சென்று பணம் செலுத்தி wallet-ல் தங்களது பணத்தை ஏற்றிக் கொள்ளலாம்.

BSNL நிறுவனத்தின் இந்த SpeedPay வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முழுவதும் கிடைக்கப்பெறும்.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :