Jul 10, 2015

சாம்சங் இந்தியா நிறுவனம் Galaxy Tab A மற்றும் Galaxy Tab E போன்ற வாய்ஸ் காலிங் டேப்லட்டை கடந்த மாதம் வெளியிட்டது. இதை தொடர்ந்து தற்போது Galaxy Tab 3 V என்ற டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய டேப்லட்டை நிறுவனத்தின் e-store தளத்தில் ரூ. 10,600-க்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் எப்போது கிடைக்கும் என்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த டேப் மலேசியாவில் வெளியிடப்பட்டது.

இந்த டேப்லட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் சிம் கார்டு வழியாக 3G கனெக்டிவிடியை பெறலாம். ஆனால் வாய்ஸ் காலிங்கை சப்போர்ட் செய்யாது.

சிறப்பம்சங்கள்

  • நிறுவனத்தின் TouchWiz skin மேலே அமைந்த ஆண்டிராய்ட் 4.4  KitKat ஓ.எஸ்.
  • 1024x600 பிக்சல் கொண்ட 7-இன்ச் WSVGA LCD திரை, 16:9 
  • விகிதம் கொண்ட திரை.
  • 3G வசதியை சப்போர்ட் செய்கிறது.
  • 1.3GHz quad-core பிராசசர்.
  • 1GB RAM.
  • 8GB சேமிப்பு திறன் கொண்டுள்ளது கூடுதல் SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
  • 5MP முதன்மை கேமரா, செல்பி கேமாரா வசதி இல்லை.
  • 322 கிராம்ஸ் எடை.
  • 3600mAh திறன் கொண்ட பேட்டரி.
  • 3G தவிர்த்து கனெக்டிவிடி அம்சங்களான Wi-Fi, GPS, Glonass,
  • Bluetooth 4.0, மற்றும் Micro-USB போன்ற அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்கிறது.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.
  Jul 10, 2015  0 Comment     Share    Twitter Facebook Whatsapp Google+ Download

No comments :