Jul 8, 2015

சியோமி நிறுவனம் சமீபத்தில் சஸ்பென்ஸ் வைத்து ஒரு படத்தை தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. அந்த படத்தில் உள்ள விலை முழுமையாக காண்பிக்கவில்லை. ஆனால் அதன் விலை ரூ. 5,999 என்று தெளிவாக யூகிக்க முடிந்தது.

ஆனால் இது Redmi 2 போனின் விலை குறைவா ? அல்லது புதிதாக வெளியிடப்போகும் Redmi 2 A போனின் விலையா? என சந்தேகமாக இருந்தது மேலும் இதற்கான முழுமையான தகவல்களை இன்று (07 ஜூலை 2015) அறிவிப்போம் என கூறியிருந்தது. 

இதன்படி தற்போது இதன் சஸ்பென்ஸ் உடைந்துள்ளது. சியோமி நிறுவனம் Redmi 2 போனின் விலையை குறைத்துள்ளது. இந்த போன் தற்போது ரூ. 5,999 விலையில் அமேசான் உள்ளிட்ட பிரபல ஆன்லைன் ஸ்டோர்களிலும்,  இதை தவிர்த்து மொபைல் ஸ்டோர் மற்றும் ஏர்டெல் சில்லறை கடைகளிலும் கிடைக்கிறது. இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Xiaomi Redmi சிறப்பம்சங்கள்.

  • இரட்டை சிம்.
  • 1280 x 720 பிக்சல் கொண்ட 4.7 இன்ச் IPS திரை.
  • Adreno 305 GPU இணைந்த 1.2 GHz quad-core Qualcomm 
  • Snapdragon 410 (MSM8916 ) 64-bit பிராசசர்.
  • 1GB RAM.
  • MIUI v6 மேலே கொண்ட Android 4.4 (KitKat) ஓ.எஸ்.
  • 8GB இன்டெர்னல் மெமரி மைக்ரோ SD கார்டு மூலம் 32GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
  • LED பிளாஸ் லைட் இணைந்த 8MP முதன்மை கேமாரா, BSI சென்சார் , f/2.2 துளை , Omnivision சென்சார், 1080p வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
  • 2MP செல்பி கேமரா, 720P HD வீடியோக்களை ரெக்கார்ட் செய்கிறது.
  • 4G LTE, 3G, WiFi 802.11 b/g/n, microusb, Bluetooth 4.0, GPS போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
  • 2200mAh திறன் கொண்ட பேட்டரி.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :