Jul 10, 2015

பேஸ்புக் மெசெஞ்சர் சாட்டில் கிடைத்து வந்த லைக் பட்டன் தற்போது டெஸ்க்டாப் பேஸ்புக் சாட்டிலும் கிடைக்கிறது.

நீங்கள் ஏற்கனவே பேஸ்புக் மெசெஞ்சரில் லைக் பட்டனை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் மூலம் உங்கள் சாட் உரையாடலில் கட்டை விரலை உயர்த்திய லைக் குறியை அனுப்பலாம். அனைவரும் விரும்பக் கூடிய இந்த பட்டன் இது வரை டெஸ்க்டாப் சாட்டில் இல்லாமால் இருந்து வந்தது.

தற்போது இதே மாதிரியான லைக் பட்டன் பேஸ்புக் டெஸ்க்டாப் சாட்டிலும் வந்துள்ளது. தற்போது பேஸ்புக்கில் உள்ள சாட் பாக்சை திறந்தவுடன் ஸ்மைலி ஐகானிற்கு அடுத்து இந்த ஐகானை பார்க்கலாம். இதை கிளிக் செய்ததும் உடனே லைக் குறி சாட்டில் அனுப்பப்படும்.

இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை சோதனை நோக்கமாக சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது படிப்படியாக அனைவருக்கும் கிடைக்கும் என கூறியுள்ளது. ஆனால் பெரும்பாலான பயனர்களுக்கு இந்த வசதி சாட் பாக்ஸில் கிடைக்கப் பெற்றுவிட்டது.

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.
  Jul 10, 2015  0 Comment     Share    Twitter Facebook Whatsapp Google+ Download

No comments :