Jul 6, 2015

சியோமி Mi 4 ஸ்மார்ட்பொன் கடந்த ஆகஸ்ட் 2014-ல் வெளியிட்டனர். சமீபத்தில் தான் இந்தியாவில் இந்த போனின் விலை சரிந்தது. தற்போது இந்த போன் ரூ. 14,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் நிறுவனம் Mi 4-ன் வாரிசான Mi 5 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

இதே போல் 4G LTE மாடல் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ. 7,999-க்கு ( ஒரிஜினல் விலையை விட ரூ. 2000 மலிவானது) விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது புதிதாக வெளிவரவிருக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் கசிந்துள்ளது. இந்த இரண்டும் சில சுவாரஸியமான ஹார்ட்வேர்கள் கொண்டுள்ளது.

முதல் புகைப்படம் சியோமி Mi 4-ன் வாரிசான சியோமி Mi 5. இந்த போன் இரண்டு LED பிளாஸ் அமைந்த இரட்டை கேமராவை கொண்டுள்ளது. இந்த அமைப்பு Huawei Honor 6 Plus மற்றும் HTC One M8 போனைப் போன்று உள்ளது. மேலும் இந்த சியோமி Mi 5-ல் 5.3 இன்ச் QHD திரை, quad-core Snapdragon 820 பிராசசர், மற்றும் 4GB RAM போன்ற அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த புகைப்படம் சியோமி ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இதைப் பார்ப்பதற்கு மிக நன்றாக உள்ளது. இந்த போன் மெட்டல் வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. மேலும் கேமராவின் கீழ் பிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னர் இடம்பெறுகிறது. இதில் 5.5 இன்ச் HD திரை, 13MP முதன்மை கேமாரா, 64-bit quad-core Qualcomm Snapdragon 410 போன்ற வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :