Jul 5, 2015

Oppo நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது அடுத்த ஸ்மார்ட்போனான Oppo Mirror 5S தைவானில் அறிவித்துள்ளது. இந்த போன் அற்புதமான சிறப்பம்சங்களையும் மற்றும் பிரதிபலிக்க கூடிய crystal முறையையும் பின் புறத்தில் கொண்டுள்ளது.

OPPO Mirror 5s ஸ்மார்ட்போன் 5 இன்ச் HD திரை மற்றும் Color OS 2.1 மேற்புறத்தில் கொண்ட ஆண்டிராய்ட் 5.1 லாலிபாப் ஓ.எஸ்-ல் இயங்குகிறது. மேலும் மெட்டல் பிரேமுடன் பாதுகாப்பான பிரதிபலிக்க கூடிய crystal முறையை பின் புறத்தில் கொண்டுள்ளது.

மேலும் 2 GB RAM வசதி கொண்ட 1.2GHz quad-core Snapdragon 410 பிராசசர் கொண்டுள்ளது. 16 GB சேமிப்பு திறன் கொண்டுள்ள இந்த போனில் கூடுதலாக SD கார்டு மூலம் சேமிப்பு திறனை விரிவுபடுத்தியும் கொள்ளலாம். LED பிளாஸ் இணைந்த 8MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

OPPO Mirror 5s சிறப்பம்சங்கள்

  • இரட்டை சிம்.
  • (1280 x 720) பிக்சல் கொண்ட 5 இன்ச் HD திரை.
  • 1.2GHz quad-core Snapdragon 410 பிராசசர்.
  • 2 GB RAM.
  • 16 GB இன்டெர்னல் சேமிப்பு திறன் மற்றும் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது.
  • LED பிளாஸ் இணைந்த 8MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா.
  • ColorOS 2.1 இணைந்த ஆண்டிராய்ட் 5.1 லாலிபாப் ஓ.எஸ்.
  • 2420 Mah பேட்டரி.
  • • LTE, 3G HSPA+, Wi-Fi, Bluetooth, microUSB, a-GPS போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
  • இதன் எடை 160 கிராம்
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :