Jul 6, 2015

WD கடந்த வியாழக்கிழமை மிக சிறிய My Passport ஹார்ட் டிரைவை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சிறிய ஹார்டு டிரைவ்ஸ் பல கலர்களில் வெளிவந்துள்ளது.
இதோடு பேக்-அப் சாப்ட்வேர், புதிய personalization தேர்வு போன்றவை மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த ஹார்டு டிரைவ்கள் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

1TB சேமிப்பு திறன் கொண்ட மாடல் ரூ. 4,750 மற்றும் 2TB சேமிப்பு திறன் கொண்டது ரூ. 7,550 என்ற விலையில் கிடைக்கிறது.

Classic Black, Brilliant White, Wild Berry, and Noble Blue போன்ற வண்ணங்களில் இது கிடைக்கிறது. இந்த My Passport ஹார்ட் டிரைவ் பிளாஸ்டிக்கால் ஆனது.  மேலும் பாதுகாப்பிற்காக 256-bit AES ஹார்ட்வேர் encryption கொண்டிருக்கிறது.

மேலும் இந்நிறுவனம் இந்த encryption அமைப்பு பயனர்களின் கோப்பு, போல்டர்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் உங்கள் ஹார்டு டிரைவ் தவறான கைகளில் சென்றால் கூட பாதுகாக்கப்பாக இருக்கும் என கூறியுள்ளது.

இந்த ஹார்டு டிரைவ் USB 3.0 சப்போர்ட் செய்கிறது. மேலும் 5 gigabits மேலே உள்ள டேட்டாக்களை ஒரு வினாடிகளில் டிரான்ஸ்பர் செய்யும் என நிறுவனம் கூறியுள்ளது. அதோடு USB 2.0-வையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த ஹார்டு டிரைவ் வரையறுக்கப்பட்ட 3 வருட வாரண்டியையும் கொண்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் மிக அதிகமான டேட்டாக்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். வெளியில் கொண்டு செல்வதற்கான டேட்டாக்களை சேமித்து வைத்து பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

மேலும் இந்த புதிய தலைமுறை My Passport டிரைவ் மிக எளிதான பேக்-அப் அனுபவம் மற்றும் பாதுகாப்பிற்காக ஹார்ட்வேர் அடிப்படையாக கொண்ட encryption அமைப்பு என சிறந்த வசதிகளை கொண்டு செயல்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :