Jul 4, 2015

பாஸ்வேர்ட், PIN Codes, OTP மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சாரை தொடர்ந்து ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த, அடுத்த தொழில்நுட்பமாக 'செல்பி' அனுமதி கொண்டு வரவுள்ளது, மாஸ்டர் கார்டு. விரைவில் செல்பி புகைப்படத்தை கொண்டு கட்டணத்தை அனுமதிக்கும்.
 வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மாஸ்டர் கார்டு தலைமை தயாரிப்பு பாதுகாப்பு அதிகாரி அஜய் பாஹ்லா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் மாஸ்டர் கார்டு போன் உற்பத்தியாளர்களான ஆப்பிள், பிளாக்பெர்ரி, கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பேசியல் ஸ்கேன்னிங் தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளது. இதற்காக நிறுவனம் இரண்டு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த புதிய செல்பி உலகத்தில் இந்த வசதி பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். மேலும் இந்த ஆப்-ல் பிங்கர் பிரிண்ட் அல்லது முகம் என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து பணம் பரிமாற்றம் செய்யலாம் என கூறினார். இந்த பாதுகாப்பான முறை எப்போது வெளியிடப் போகிறார்கள் என்பதை பாஹ்லா குறிப்பிடவில்லை. எனினும் இந்த சோதனை விரைவில் தொடங்கும் எனவும் என்றார்.

இந்த தொழில்நுட்பத்தில் பயனர்கள் மாஸ்டர் கார்டு போன் ஆப்-ஐ உங்கள் சாதனத்தில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அந்த பண பரிமாற்ற செயல்முறையின் போது பயனர்களின் அங்கீகாரத்திற்காக இந்த ஆப் ஒரு pop-up கொடுக்கும். அப்போது பயனர்கள் பிங்கர் பிரிண்ட் தேர்வை எடுத்தால் பயனர்கள் விரல் மூலம் டச் செய்து பரிமாற்றம் செய்யலாம். இலையெனில் பேசியல் அங்கீகாரத்தை கிளிக் செய்தால் சாதனம் உங்கள் கண்களின் நிலை மற்றும் ஒரு தடவை கண் மிளிர்வது முடிந்தவுடன் பண பரிமாற்றம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

இந்த பாதுகாப்பான வசதிக்காக பயனர்களின் முகம் மற்றும் பிற தகவல்கள் நிறுவனத்தின் செர்வரில் சேமித்து வைக்கப்படும். மேலும் இந்த தொழில்நுட்பம் இது வரை சோதனையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் OTP, பாஸ்வேர்ட் இன்றி உங்கள் முகத்தைக் காட்டி ஆன்லைன் பரிவர்த்தனைகளை நீங்கள் அனுமதிக்கலாம். 
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :