Jul 3, 2015

10000mAh பேட்டரி திறன் கொண்ட ஆண்டிராய்ட் ஸ்மார்ட்போன் விரைவில் வரவுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பளர்களான Oukitel , Oukitel K10000 என்ற ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற தகவல்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த சாதனத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் பேட்டரி 10000mAh திறனைக் கொண்டுள்ளது.

இந்த போனை பயன்படுத்துபவர்களுக்கு பவர் பேங்கை கூடவே எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு மத்தியில் போனின் பேட்டரி வெகுவாக குறைவதில்லை.

இதற்கு முன் ஜியோனி மாரத்தான் M5 ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி திறனைக் கொண்டதாக வெளிவந்தது.  Neowin தளம் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பார்க்கும் போது இந்த சாதனம் மெட்டல் மேற்புறத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மேற்புறத்தில் இரட்டை ஸ்பீக்கர் மற்றும் இந்த இரண்டு ஸ்பீக்கருக்கு நடுவே யூஎஸ்பி கனெக்டிவிடியும் உள்ளது.

Oukitel K10000 சிறப்பம்சங்கள்

  • 720x1280 பிக்சல் கொண்ட 5.5 இன்ச் முழு HD திரை.
  • quad-core MediaTek MT6735 SoC பிராசசர்.
  • 2GB RAM.
  • 16GB இன்டெர்னல் சேமிப்பு திறன்.
  • 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா


மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய முழுமையான சிறப்பம்சங்களை இந்த போனை இந்நிறுவனம் வெளியிடும் போது தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன் சில ஸ்மார்ட்போன்கள் அதிக பேட்டரி திறன் கொண்டதாக வெளிவந்தது, அவைகள் செல்கான் மில்லினியா Q5K பவர் மற்றும் ஜியோனி மாரத்தான் M3 போன்ற ஸ்மார்ட்போன்கள் 5000mAh பேட்டரி திறன் கொண்டதாகவும், அதே போல் Lava Iris Fuel 20 ஸ்மார்ட்போன் 4400mAh பேட்டரி திறன், Karbonn Alfa A120 ஸ்மார்ட்போன் 3000mAh பேட்டரி திறன் கொண்டதாகவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், என்ன விலை என்பது பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த சாதனம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :