Jul 11, 2015

யாஹூ மெயிலில் புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் லிங்குகள் சேர்ப்பதை எளிதாக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் மெயில் சேவை மூலமே அனைவரும் தகவல்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் அதன் பின் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவை பிரபலமடைந்ததால் இதன் மூலம் தங்களது நண்பர்களிடம் நேரடி தொடர்பில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் மெயில் சேவைகள் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

ஆனாலும் சில பயன்பாடுகளுக்கு மெயில் சேவை பெரிதும் உதவுகிறது. சில தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலுவலகங்களில் பெரிதும் உதவுகிறது. இந்த மெயில் சேவையில் முன்பு மிகவும் பிரபலமடைந்த ஓன்று யாஹூ. ஆனால் கூகிளின் ஜிமெயில் சேவை வருகையால் அதன் போட்டியை யாஹூவால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் யாஹூ நிறுவனம் இந்த போட்டியை சமாளிக்க தங்களது மெயில் சேவையை மீண்டும் மேம்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி சில புதிய வசதிகளை யாஹூ மெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Add Photos, files, gif images, மற்றும் Web links போன்ற சார்ட்கட்-களை composing மெயில் பகுதியில் கூடுதலாக இணைத்துள்ளது. இந்த புதிய யாஹூ மெயில் வசதி US பயனர்களுக்கு இன்னும் சில தினங்களில் கிடைக்கவுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் பற்றி யாஹூ தெரிவிக்கவில்லை. விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வசதியை பயன்படுத்த உங்கள் யாஹூ மேயிலின் compose ஈமெயில் விண்டோ பகுதியின் இடது கீழ் ஓரத்தில் உள்ள plus sign ஐ-கானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் இடது பக்கத்தில் photos, files, gif images, மற்றும் Web links போன்ற தேர்வுகள் தோன்றும்

இந்த புதிய வசதிகள் குறித்த வீடியோவை பாருங்கள்.  


புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.
  Jul 11, 2015  0 Comment     Share    Twitter Facebook Whatsapp Google+ Download

No comments :