Jul 11, 2015


புதிதாக வெளியாகப்போகும் ஒன் பிளஸ் 2 ஸ்மார்ட்போனைப் பற்றிய மற்றொரு தகவல் ஓன்று வந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 4 GB LPDDR4 RAM வசதியை கொண்டுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே இந்த ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் கடைசி தகவல். 

இதையடுத்து இந்த போனை ஜூலை 27 ஆம் தேதி வெளியிடுகையில் முழுமையான தகவல்களை பெறலாம். ஒன் பிளஸ் 2-வில் வரும் LPDDR4 RAM லேட்டஸ்ட் மற்றும் மிக நீளமான RAM வசதி. இந்த 4GB RAM வசதியால் கேம்கள் மென்மையாக இயங்குவதோடு, பேட்டரி செயல்திறன் திறமையானதாக இருக்கும். LPDDR4 RAM மிக குறைந்த பவரை நுகர்வதொடு, பேட்டரி செயல்திறனும் மேம்படுத்தப்படுகிறது.


இது வரை வந்த தகவல்கள் மற்றும் விலையின் அடிப்படையில் ஒன் பிளஸ் 2 சிறந்த மொபைலாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் விலை $450 க்கு மேல் இருக்காது என ஏற்கனவே நிறுவனத்தின் CEO உறுதி அளித்துள்ளார்.

அதோடு இந்த விலையில் மேம்படுத்தப்பட்ட 64 bit 810 Soc, USB Type C, Oxygen OS, பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் முழு மெட்டல் மேற்புறம் போன்றவற்றை பெறலாம்.இதற்கு மேலான தகவல்களை இன்னும் 20 நாட்களில் தெரிந்து கொள்ளலாம். அது வரை காத்திருங்கள்.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.
  Jul 11, 2015  0 Comment     Share    Twitter Facebook Whatsapp Google+ Download

No comments :