Jul 1, 2015

Huawei நிறுவனம் metal-clad கொண்ட 'Honor 7' என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. 

இதன் விலை 16 GB மாடல் CNY 1999 ( இந்திய மதிப்பு 20,500), 16 GB இரட்டை சிம் மாடல் CNY 2199 (இந்திய மதிப்பு ரூ. 22,600), 64GB மாடல் CNY 2499 ( இந்திய மதிப்பு ரூ. 25,600 ). 

இந்த சாதனம் மற்ற இடங்களில் கிடைக்கும் தகவல்களை வெளியிடவில்லை.

Huawei Honor 7 சிறப்பம்சங்கள்
  • ஆண்டிராய்ட் 5.0 லாலிபாப் ஓ.எஸ்.
  • அலுமினிய வடிவமைப்பை கொண்டுள்ளது.
  • 1080x1920 பிக்சல் கொண்ட 5.2 இன்ச் முழு HD திரை.
  • ARM's Mali-T628 GPU இணைந்த 64-bit octa-core Kirin 935 (four Cortex-A53 cores at 2.2GHz + four Cortex-A53 at 1.5GHz) பிராசசர்.
  • 3GB RAM.
  • மைக்ரோ SD கார்டு மூலம் 128GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
  • Sony IMX230 சென்சார், f/2.0 துளை, 6-lens module இணைந்த 20MP முதன்மை கேமரா, மேலும் இதன் கேமராவை சுற்றி நீல கல் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • f/2.4 துளை கொண்ட 8MP செல்பி கேமரா.
  • இதன் முதன்மை கேமராவின் வலது புறத்தின் கீழே பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் உங்கள் கை விரல்களை வைத்து ஸ்மார்ட்போனை திறக்கலாம் (UNLOCK).
  • NFC, dual-band Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 4.1, GPS/ A-GPS, and 4G LTE போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
  • பேட்டரி 3100mAh திறன் கொண்டுள்ளது.
  • எடை 157 கிராம்ஸ்.

இதன் போனில் சார்ஜ் மிக வேகமாக ஏறுகிறது. இந்த வசதி மூலம் 100% முழுமையான சார்ஜ் 1 மணி நேரம் 25 நிமிடங்களிலும் 50% சார்ஜ் 30 நிமிடங்களிலும் ஆகிறது. 

இந்த போன் தற்போது சீனாவில் மட்டும் வெளியிட்டுள்ளனர். மற்ற நாடுகளில் வெளியிடுவது பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :